நவராத்திரி சிறப்புகள்
நவதுர்க்கை என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும்.
செல்வம் ,கல்வி ,வீர அதிபதிபதிகள்
'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும்.
வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.
சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.
இந்த ஒன்பது வடிவங்களுக்கும் இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர்.
இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
முதல் நாள்: சைலபுத்ரி
இரண்டாம் நாள்: பிரமசாரிணி
மூன்றாம் நாள்: சந்திரகாண்டா
நான்காம் நாள்: கூஷ்மாண்டா
ஐந்தாம் நாள்: ஸ்கந்தமாதா
ஆறாம் நாள்: காத்யாயினி
ஏழாம் நாள்: காளராத்திரி
எட்டாம் நாள்: மகாகௌரி
ஓன்பதாம் நாள்: சித்திதாத்திரி
நவதுர்க்கா தியான சுலோகம்
”பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம் திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம் பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி ஷஷ்டமம் காத்யாயனீம் சப்தமம் காலராற்றிச்ச அஷ்டமம் கௌரிநிம் நவமம்
சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்”
மேலும் தகவல் அறிய- CLICK HERE
No comments:
Post a Comment