Breaking News

Saturday 12 December 2020

மகத்துவம் நிறைந்த மார்கழி

    

 1.மாதங்களில் மார்கழி அழகு. பகவான் கிருஷ்ணன் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கூறியுள்ளார். 
        அப்படியானால் அதன் புனிதமும், அழகும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று.


2.மார்கழி மாதத்தை  சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும்.


3.சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை,

திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடுவர்.


4. வைணவர்கள் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

                                                    
5.சூரியனின் இயக்கம் அயனம் எனப்படும். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர்.தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மேலும் உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள்.

6. மார்கழி மாதம் பக்திக்கு உரிய மாதம், பணிவாக இறைவனை அடையக் கூடிய மாதம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற மிக அருமையான இறைவனின் அருளைப் பெறக் கூடிய கொண்டாட வேண்டிய மாதம் இந்த மார்கழி மாதம்.


இதன் காரணமாக மார்கழி மாதத்தில் தினமும் காலை நீராடி, வீட்டில் இறைவனை வணங்கி விட்டு, அருக்கில் உள்ள திருமால் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வருவது மிகச்சிறந்த இறை அருளை பெறலாம்.


மார்கழி மாத ஸ்லோகங்கள்-  CLICK HERE

திருப்பாவை -PDF -CLICK HERE


திருவெம்பாவை- PDF -CLICK HERE


FREE CLASSIFIEDS TO DEVELOP YOUR BUSINESS WITH US- CLICK HERE

No comments:

Post a Comment